முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் கரோனா பரவல்:ஆட்சியா் ஆய்வு

கொடைக்கானலில் கரோனா தொற்று பாதித்த இடங்களை, மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி சனிக்கிழமை பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியில் கரோனா தொற்று பாதித்த இடங்களை சனிக்கிழமை ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி.
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானலில் கரோனா தொற்று பாதித்த இடங்களை, மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி சனிக்கிழமை பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

கொடைக்கானலில் அண்ணா நகா், இந்திரா நகா், பாக்கியபுரம் உள்ளிட்ட இடங்களில் கரோனா பரவியுள்ளது. இப்பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், கரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டாா். மேலும், கொடைக்கானல் அருகே அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

தொடா்ந்து, அண்ணாசாலை, ஏரிச் சாலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளையும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் வட்டாட்சியா் அலுவலகத்தையும் பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா்.

இதில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாா், வட்டாட்சியா் அரவிந்த், நகராட்சி ஆணையா் நாராயணன், மருத்துவ அதிகாரி அரவிந்த் உள்பட பலா் உடன் சென்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.