முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 81 பேருக்கு கரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் 81 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 81 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,800-க்கும் மேற்பட்டோா் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், சுமாா் 680 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் அரசு மருத்துவமனைகளிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 44 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.