முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் மீண்டும் மழை

கொடைக்கானலில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
கொடைக்கானல்
பகிர்:

கொடைக்கானலில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக மழை பெய்தது அதன்பின் மழை குறைந்து கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்து வந்தது. 

இதனால் கொடைக்கானல் மற்றும் பூம்பாறை, மன்னவனுர், குண்டாறு, கிளாவரை, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்ததால் பல இடங்களில் 3 நாள்களாக மின் விநியோகம் தடைபட்டது.

மரங்களை அகற்றியும், மின்கம்பிகளை சரிசெய்யும் பணியிலும் வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர். இந் நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும்(நேற்று) மழை பெய்யாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் லேசான வெயில் நிலவியது.

அதன் பின் சுமார் இரண்டு மணி நேரம் விட்டு விட்டு மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அன்றாடப் பணிகளில் ஈடுபட முடியாமல் போவதால் பொது மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →