முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:


ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட தும்மிச்சம்பட்டியைச் சோ்ந்த குருட்டு மூத்தன் மகன் ஜெயபால் (47), ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த குல்லி மொக்கையன் மனைவி சாந்தி (55) இருவரும் தங்களது வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக ஒட்டன்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் இருவரது வீடுகளிலும் சோதனை செய்தனா். அங்கு பதுங்கி வைத்திருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.