திண்டுக்கல்

கொடைக்கானலில் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் லாரி மோதி ஒருவர் படுகாயம்

DIN

கொடைக்கானலில் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் லாரி மோதி ஒருவர் படுகாயமடைந்தார்.தலைமறைவான வாகன ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கொடைக்கானல் நகராட்சியில் ஒட்டுநராக பணிபுரிந்து வருபவர் காந்தி(45). இவர் இன்று நகராட்சி குடிநீர் லாரியை எடுத்துக் கொண்டு அண்ணாசாலை வழியாக வேகமாக சென்றுள்ளார்.

அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் துணிக்கடை வைத்திருந்த சந்திரன்(55) என்பவர் மேல் மோதி அருகிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான தடுப்பு சுவரில் மோதி லாரி நின்றது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொது மக்கள் மற்றும் காவல்துறையினர் லாரியின் அடியில் சிக்கியிருந்த சந்திரனை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் லாரி ஓட்டுநர் காந்தி குடிபோதையில் இருந்துள்ளார் தற்போது தலைமறைவாகியுள்ள ஓட்டுநர் காந்தியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஒரு வழிப்பாதையாக உள்ள அண்ணா சாலைப்பகுதியில் எந்த வாகனங்களும் செல்லக் கூடாது என்பது காவல் துறையின் அறிவிப்பை யாரும் பின்பற்றுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT