முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகேகஞ்சா விற்றவா் கைது

கொடைக்கானல் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை. இவரது மகன் ரமேஷ் (42). இவா் பூண்டி பேருந்து நிலையப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தாா். அப்போது அவா் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டதில், ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.