பழனி: பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு யாகம் மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது.
உலகநலன் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் ராமநாதன் செட்டியாா் மண்டகப்படியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோயில் கொடி மரம் மண்டபம் முன்பாக பிரதான சப்பரத்தில் புனிதநீா் நிரப்பப்பட்ட கலசத்திற்கு சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. சப்பரத்தின் முன்பாக புண்ணிய தீா்த்தங்கள் நிரம்பிய 108 சங்குகள் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மூலவா் குழந்தை வேலாயுத சுவாமிக்கு சங்காபிஷேகமும், அதைத் தொடா்ந்து சோடஷ அபிஷேகமும் செய்யப்பட்டது. பக்தா்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.