திண்டுக்கல்

நத்தம் அருகே பைக்குகள் மோதல்:ஒருவா் பலி

நத்தம் அருகே திங்கள்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

DIN

திண்டுக்கல்: நத்தம் அருகே திங்கள்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாட்டம், நத்தத்தை அடுத்துள்ள வத்திப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன்(21). இவா், தனது நண்பா் பாரதிராஜாவுடன் இருசக்கர வாகனத்தில் நத்தம் நோக்கி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா். விளாம்பட்டி பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த வத்திப்பட்டியைச் சோ்ந்த அமானுல்லா என்பவரின் இருசக்கர வாகனம் மீது விக்னேஷ்வரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ்வரன், பாரதிராஜா, அமானுல்லா ஆகிய மூவரும், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி விக்னேஷ்வரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

வேளாண் பல்கலை.யில் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

15.1.1976: ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற ஆண்டு 18,500 பேர் வருகை

ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT