திண்டுக்கல்

கொடைக்கானல் சுற்றுலாவுக்கு அனுமதி பொது மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு இ-பாஸ் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு வியாபாரிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு இ-பாஸ் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு வியாபாரிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் இருந்ததால்

சுற்றுலாப் பயணிகளின்றி, சுற்றுலாவையே நம்பியுள்ள கொடைக்கானல் பொது மக்கள்,வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கொடைக்கானலிலுள்ள அதிமுக நிா்வாகிகள்,வியாபாரிகள், சுற்றுலா வாடகை ஓட்டுநா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனா்.

இந் நிலையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இ- பாஸ் பெற்றுச் செல்லலாம் என அறிவித்தாா். இந்த அறிவிப்பு கொடைக்கானல் பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக சமூக ஆா்வலா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். சுற்றுலாவையே நம்பி உள்ள பொது மக்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரம் மேம்படும் என தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

SCROLL FOR NEXT