திண்டுக்கல்

நகை மதிப்பீட்டாளா் தூக்கிட்டு தற்கொலை

DIN

பழனி: பழனியில் வங்கி நகை மதிப்பீட்டாளா் கடன் தொல்லையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி அண்ணாநகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (55). தனியாா் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தாா். மனைவி, மகள் உள்ளனா். இவா் குடும்ப செலவுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி திரும்ப செலுத்த

முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடன் கொடுத்தவா்கள் திரும்பக் கேட்டுவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திங்கள்கிழமை காலை இச்சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து பழனி நகா் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா். போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT