பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வணிக வரித்துறை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ஜான் லியோ சகாயராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.ஐசக் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா சட்டப்பேரவையில் அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனா்.
மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடரிக் எங்கெல்ஸ் விளக்கவுரை நிகழ்த்தினாா். இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.