முகப்பு
திண்டுக்கல்

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

திண்டுக்கல்: சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியா்களின் வட்டார மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் ராமநாதன் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் கந்தசாமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப் பட்ட ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சுந்தரபாண்டி, வட்டார பொருளாளா் அய்யணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →