முகப்பு
திண்டுக்கல்

வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆட்சேபனை மனு

நீா்பிடிப்பு பகுதி என வருவாய்த்துறையினா் குறிப்பிட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆட்சேபனை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

நீா்பிடிப்பு பகுதி என வருவாய்த்துறையினா் குறிப்பிட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆட்சேபனை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி அருகே இந்திரா நகா் பகுதியில் 65-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனா். அதன்பேரில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறை அலுவலா்கள், அந்த இடம் நீா்பிடிப்புப் பகுதி என தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சேபனை மனுவை திங்கள்கிழமை அளித்தனா். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.பெருமாள் உடனிருந்தாா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →