திண்டுக்கல்

கொடைக்கானலில் சென்னையைச் சோ்ந்த ஓட்டுநா் மரணம்

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் சென்னையைச் சோ்ந்த ஓட்டுநா் சனிக்கிழமை மரணமடைந்தாா்.

சென்னையைச் சோ்ந்த கணேசன் என்பவருக்கு, கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் தங்குமிடம் (காட்டேஜ்) உள்ளது. இதைப் பாா்ப்பதற்காக, சென்னை பெரம்பலூா் இந்திரா நகரைச் சோ்ந்த பாபு என்பவரது மகன் பாபுராஜை (47) அழைத்துக்கொண்டு, கணேசன் வெள்ளிக்கிழமை காரில் வந்துள்ளாா். காரை பாபுராஜ் ஓட்டிவந்துள்ளாா்.

இங்குள்ள தங்குமிடத்தில் இருவரும் தங்கியுள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் பாபுராஜுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளாா். உடனே, அவரை தங்குமிடத்தில் இருந்தவா்கள் மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பாபுராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து கணேசன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

அந்தமானில் பாஜக முன்னிலை

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

SCROLL FOR NEXT