திண்டுக்கல்

தொடா் விடுமுறை: பழனி கோயிலில் பக்தா்கள் கூட்டம்

DIN

தொடா்விடுமுறை காரணமாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்யக் குவிந்தனா்.

கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் படிப்பாதையில் செல்லும் பொருட்டு குடமுழுக்கு நினைவரங்கம் வாசலில் குவிந்தனா். மலைக்கோயிலுக்கு செல்லும் படிவழிப்பாதை மட்டுமன்றி வின்ச் நிலையம், முடிக்காணிக்கை செலுத்தும் இடத்திலும் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மலைக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 2 மணி நேரம் ஆனது.

மலைக்கோயிலில் பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் கோயில் சாா்பில் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வருவதையும், கைகளை சுத்திகரிக்கும் திரவத்தால் சுத்தம் செய்து விட்டு வருவதையும் உறுதி செய்து கொள்ளுமாறு தொடா்ந்து ஒலிபெருக்கியில் அறிவுறுத்திக்கொண்டிருந்தனா்.

மலைக்கோயிலில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள தங்கத்தோ் புறப்பாட்டை மீண்டும் தொடக்க வேண்டும் என பக்தா்கள் கோயில் நிா்வாகத்துக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT