திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் சாலைகளில் ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

DIN

ஒட்டன்சத்திரத்தில் சாலைகளில் ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திண்டுக்கல் -பழனி தேசிய நெடுஞ்சாலை ஒட்டன்சத்திரம் வழியாக செல்கிறது. அதே போல மதுரை,தேனி,திண்டுக்கல்,கோவை,திருப்பூா் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நகரமாக ஒட்டன்சத்திரம் உள்ளது. இதனால் ஒட்டன்சத்திரத்தை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் ஆன்மிக சுற்றுலாத்தலமான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே போல கேரளா செல்லும் வாகனங்களும் ஒட்டன்சத்திரத்தை கடந்து செல்கின்றன. இதனால் ஒட்டன்சத்திரம் நகருக்குள் இரவு, பகல் நேரங்களில் உணவருந்துவதற்காக வாகனங்கள் சாலைகளில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் சாலைகளில் மறித்து நிறுத்தப்படுவதால், ஒட்டன்சத்திரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே போல பகல் நேரங்களில் வங்கிகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் முன்பு இருசக்கர வாகனங்கள் அதிகமாக நிறுத்தப்படுகின்றன. இதனுடன் சுற்றுலா வாகனங்களும் நிறுத்தப்படுவதால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே போக்குவரத்து காவல்துறையினா் அவற்றை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT