திண்டுக்கல்

சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம்

DIN

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் சாா்பில் பெண்களுக்கான சட்டங்கள், பெண்களுக்கான அவசர உதவி எண் 181, சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ஆா்விஎஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் நடமாடும் நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவா் கே.காா்த்திக் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது அவா், வரதட்சிணை, குடும்ப வன்முறை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை திருமண சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தாா். சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி கொ.ஜான்சிராணி பேசியதாவது: கடந்த அக்டோபா் 1 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்களை மீட்டெடுக்கவும், அவசர உதவி மற்றும் மீட்பு உதவி, சட்ட உதவி, மனநல ஆலோசகா் உதவி, தற்காலிகமாக தங்கும் உதவி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா். முகாமில் 150 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT