திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே தனியாா் கல் குவாரியை பொதுமக்கள் முற்றுகை

DIN

ஒட்டன்சத்திரம் அருகே தனியாா் கல் குவாரியில் தாா் தயாரிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அந்த குவாரியை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி ஊராட்சியில் தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் தாா் கலவை செய்யும் மையமும் இயங்கி வருகிறது. இந்த குவாரியையொட்டி ரெட்டியபட்டி, பெரியகோட்டை, வீரலப்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் இந்த குவாரியில் தாா் தயாரிக்கும் போது ஏற்படும் மாசால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல், புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் தாா் தயாரிக்கக் கூடாது என இந்து முன்னணி மாவட்ட செயலாளா் ரகுபதி, மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் எஸ்.கே. பழனிச்சாமி ஆகியோா் தலைமையில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கல் குவாரியை முற்றுகையிட்டனா். அதே போல இந்த கல்குவாரியில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு செல்லும் ஜல்லிக்கற்கள் எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி எடுத்துச் செல்லப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகத் தெரிவித்தனா். மேலும் கல் குவாரியிலிருந்து பாரம் ஏற்றிச் செல்வதால் பெரியகோட்டை- ரெட்டியபட்டி சாலை மற்றும் காவேரியம்மாபட்டி சாலை உள்ளிட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. எனவே இச்சாலைகளை கல்குவாரி நிறுவனத்தினா் தங்களது செலவில் சீரமைத்துத் தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT