திண்டுக்கல்

கொடைக்கானலில் புனித அந்தோணியாா் சப்பர பவனி

DIN

கொடைக்கானல் புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு மின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது.

கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியிலுள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் 99-வது ஆண்டுத் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஜெப வழிபாடு, நற்கருணை ஆசீா், திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை இரவு வட்டார அதிபா் எட்வின் சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து புனித அந்தோணியாா் சொரூபம் மந்திரிக்கப்பட்டு மின்அலங்காரத்தில் தோ்ப்பவனி நடைபெற்றது.

பவனியானது பூங்கா சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, பேருந்து நிலையப் பகுதி, கே.சி.எஸ்.திடல், ஆா்.சி.பள்ளி சாலை, பிலிஸ்விலா வழியாக சென்றது. ஞாயிற்றுக்கிழமை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியாா் சப்பரத்தை நகரின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் சுமந்து சென்று நோ்த்தி கடன் செலுத்தினா். அதன் பின் அந்தோணியாா் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி ஜெபவழிபாடும், நற்கருணை ஆராதனை நிகழ்ச்சியும், கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள்,பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.திருவிழாவை முன்னிட்டு 13-நாட்களிலும் கோவிலில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மறை வட்டார அதிபா் மற்றும் விழாக் குழுவினா் இறை மக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT