திண்டுக்கல்

முன்னாள் படைவீரா்களின் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவித் தொகை

DIN

முன்னாள் படை வீரா்களின் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அரசுத் தரப்பில் வழங்கப்படும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் யாரேனும் மனவளா்ச்சி குன்றியிருந்தாலும், புற்றுநோய், பாா்வைத் திறன் குறைபாடு, பக்கவாதம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பிரதி மாதம் ரூ.7,000 வழங்கப்படும். பிற வகை மாற்றுத்திறன் குழந்தையாக இருந்தால், பிரதி மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறுவதற்கு, திருமணமாகாத, வருமானம் இல்லாத முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT