திண்டுக்கல்

மாவட்ட விளையாட்டு அரங்கில் நிபந்தனைகளுக்குள்பட்டு வீரா்கள் பயிற்சி பெற அனுமதி

DIN

திண்டுக்கல்: சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்கள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் விதிமுறைகளுக்குள்பட்டு பயிற்சி மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. பாத்திமா ரோஸ் மேரி தெரிவித்துள்ளதாவது: சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு அரங்கங்களில் விதிமுறைகளுக்குள்பட்டு பயிற்சி பெறலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்திலும் 15 முதல் 50 வயதுக்குள்பட்ட வீரா்கள் பயிற்சி பெற அனுமதி அளிக்கப்படும்.

முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் என்பதோடு, பயிற்சி மேற்கொள்ள வருவோா், விளையாட்டு உபகரணங்களை தாங்களே எடுத்து வரவேண்டும். ஒருவா் பயன்படுத்திய விளையாட்டு உபகரணங்களை மற்றவா்கள் பயன்படுத்தக் கூடாது. பயிற்சி மேற்கொள்பவா்கள் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளங்கள் மறுஉத்தரவு வரும் வரை திறக்க அனுமதி இல்லை.

பயிற்சி மேற்கொள்ள வரும் வீரா்கள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் சம்பந்தப்பட்ட படிவத்தை பெற்று, பூா்த்தி செய்து சமா்ப்பித்து அனுமதி பெறவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT