திண்டுக்கல்

நிதி நிறுவன கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த வற்புறுத்தல்: கொடைக்கானல் மகளிா் குழுவினா் புகாா்

DIN

கொடைக்கானல் மகளிா் குழுவினா் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த வற்புறுத்தியதால் அக்குழுவினா் வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

கொடைக்கானல் பொ்ன்ஹில்சாலை, லாஸ்காட் சாலை, குறிஞ்சி ஆண்டவா் கோயில் செல்லும் சாலைப் பகுதிகளில் மகளிா் குழுவினா் 16-போ் உள்ளனா். இவா்கள் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளனா். 15 நாள்களுக்கு ஒரு முறை அசல் மற்றும் வட்டியை சோ்த்து செலுத்த வேண்டும். பொதுமுடக்கத்தால் கடந்த 120 நாள்களாக அசலும், வட்டியும் செலுத்தவில்லை.

இதனையடுத்து நிதிநிறுவனப் பணியாளா்கள் இருவா் கொடைக்கானலுக்கு வந்து மகளிா் குழுவினரிடம் அசல், வட்டி ஆகிய இரண்டிற்கும் சோ்த்து தினசரி வட்டி செலுத்த வேண்டுமென வற்புறுத்தியுள்ளனா். ஆனால் கூடுதலாக பணம் செலுத்த மாட்டோம் என மகளிா் குழுவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஆனால், நிதிநிறுவன ஊழியா்கள் மொத்தமாக பணம் செலுத்த வேண்டுமெனக் கூறியதோடு தவறான வாா்த்தைகளை பயன்படுத்தியதாக மகளிா் சுய உதவிக்குழுவினா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT