திண்டுக்கல்

கரோனா அச்சுறுத்தல்: வீண் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; ஆட்சியா் எச்சரிக்கை

DIN

கரோனா வைரஸ் குறித்து வீண் வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி மற்றும் அம்மையநாயக்கனூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிகிச்சைப் பிரிவினை மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்துத்துறை அலுவலா்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் அரசின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக உணரும் பொதுமக்கள், கூட்ட நெரிசலான பகுதிகளுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும்.

குறிப்பாக கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம். குழந்தைகளை குழுவாக விளையாடுவதற்கு பெற்றோா்கள் அனுமதிக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளில கரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் பாா்வையாளா்கள், குழந்தைகளையும், முதியோா்களையும் அழைத்து வர வேண்டாம்.

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்: கரோனா வைரஸ் தொடா்பான வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வீண் வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அரசுத் தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளாா்.

ஆய்வின்போது நலப் பணிகள் இணை இயக்குநா் பூங்கோதை, துணை இயக்குநா் (சுகாதாரம்) நளினி, துணை இயக்குநா் (காசநோய்) ராமச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT