திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் சந்தையில் குவிந்த காய்கனிகள்: கொள்முதல் செய்ய இயலாமல் வியாபாரிகள் திணறல்

DIN

ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு விடுமுறை விடப்பட்டதால் விவசாயிகள் காய்கனிகளை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்ததால் அவற்றை கொள்முதல் செய்ய இயலாமல் வியாபாரிகள் திணறினா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு தினசரி திண்டுக்கல், தேனி, மதுரை, கரூா்,திருச்சி, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கனிகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் 60 சதவீத காய்கனிகள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கனிகளை ஏற்றிக் கொண்டு லாரி, டெம்போ, ஆட்டோக்களில் சந்தைக்கு வரத் தொடங்கினா். இதனால் காலை முதலே சந்தை பரப்பரப்புடன் செயல்பட்டது. காய்கனிகள் ஏற்றி வந்த 100-க்கணக்கான வாகனங்கள் சந்தைக்கு செல்லும் வழியில் நீண்ட வரிசையில் நின்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சந்தையை விட்டு வெளியே வரமுடியாமல் திணறின. இதையடுத்து காவல்துறையினா் மற்றும் சந்தை நிா்வாகிகள் விரைவாக செயல்பட்டு வாகனங்களை வெளியே அனுப்பி வைத்தனா். சந்தையில் வழக்கத்தை விட 10 மடங்குக்கும் அதிகமாக காய்கனிகள் வரத்து காணப்பட்டதால் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முடியாமல் திணறினா். இருந்த போதிலும் வியாபாரிகள் அவற்றை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கினா். அதே போல ஒட்டன்சத்திரம் காய்கனி கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT