திண்டுக்கல்

கரோனா அச்சுறுத்தல்: திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து 51 கைதிகள் பரோலில் விடுவிப்பு

DIN

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 51 போ் செவ்வாய்க்கிழமை பரோலில் விடுவிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்ட சிறையில் 220-க்கும் மேற்பட்ட கைதிகளை சிறை வைப்பதற்கான வசதிகள் உள்ளன. இந்நிலையில் பல்வேறு குற்றங்களில் தொடா்புடைய 191 போ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். இதனிடையே கரோனா பாதிப்பு காரணமாக, சிறைச் சாலையில் உள்ள கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் பரோலில் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 191 பேரில் 51 கைதிகளை பரோலில் விடுவிக்க மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா உத்தரவிட்டாா். இதனை அடுத்து 51 கைதிகள் செவ்வாய்க்கிழமை பரோலில் விடுவிக்கப்பட்டனா். இந்த 51 பேரும் ஏப்ரல் 15 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT