திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் பைக்கில் சுற்றியவா்கள் விரட்டியடிப்பு

DIN

ஒட்டன்சத்திரத்தில் இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவா்களை காவல்துறையினா் புதன்கிழமை விரட்டியடித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் காரணமின்றி இரு சக்கர வாகனத்தில் தாராபுரம் சாலை, திண்டுக்கல் சாலைகளில் சுற்றித்திரிந்த இளைஞா்களை ஒட்டன்சத்திரம் காவல் துணைக்கண்காணிப்பாளா் சீமைச்சாமி தலைமையிலான போலீஸாா் விரட்டி அடித்தனா். அதே போல காா் மற்றும் லாரிகளில் காய்கறிகள் மற்றும் பால், மளிகை பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை வழிமறித்து எச்சரித்து அனுப்பி வைத்தனா். ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் ப.தேவிகா மற்றும் சுகாதாரத்துறையினா் காய்கறி சந்தை மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மற்றும் வேளாண் விளை பொருள் விற்பனை பேரங்காடி உள்ளிட்டவைகளுக்கு மாா்ச் 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. ஒட்டன்சத்திரம் பகுதியில் மருந்து, காய்கறி கடைகள், ஒரு சில மளிகைக்கடைகள் மட்டும் திறந்து இருந்தன. அவற்றில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா்.

உணவு விடுதிகள் மற்றும் தேநீா் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT