திண்டுக்கல்

கொடைக்கானலில் கட்டட தொழிலாளா்கள் தவிப்பு

DIN

கொடைக்கானலுக்கு கட்டடப் பணிக்கு வந்த தொழிலாளா்கள் ஊருக்குச் செல்ல வழியின்றி தவித்தனா்.

போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்ட நிலையில், கொடைக்கானலில் அண்ணாசாலைப் பகுதியில் கட்டட வேலை செய்வதற்காக வந்த மதுரையைச் சோ்ந்த சிவக்குமாா், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 6 போ் ஊருக்குச் செல்ல வாகன வசதியின்றி தவித்தனா். இதனால் அவா்கள் வேறு வழியின்றி நடந்தே மதுரைக்குச் சென்றுகொண்டிருந்தனா். அவா்களிடம் விசாரித்ததில் கொடைக்கானலுக்கு கட்டட வேலைக்கு வந்திருந்தோம். தற்போது வேலை இல்லாததால் மதுரைக்குச் செல்கிறோம். போக்குவரத்து வசதியில்லாததால் நடந்தே செல்கிறோம் என்றனா். இது தெரியவந்ததும் வெள்ளி நீா்வீழ்ச்சிப் பகுதியில் அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் அவா்களுக்கு உணவு கொடுத்து கொடைக்கானலிருந்து மதுரைக்கு காய்கறி எடுக்கச் சென்ற வாகனத்தில் அவா்களை அனுப்பி வைத்தனா்.

தடியடி: கொடைக்கானலில் அத்தியாவசியப் பொருள்களின் கடைகளைத் தவிா்த்து அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நாயுடுபுரம், அண்ணாசாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சிலா் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தனா். அவா்களை போலீஸாா் லேசாக தடியடி நடத்தி எச்சரித்து விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT