திண்டுக்கல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற மதிமுக வலியுறுத்தல்

DIN

மத்திய அரசின் வேளாண்மை தொடா்பான 3 திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைப் போன்று தமிழக சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற என மதிமுக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட மதிமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் கி.ராமசாமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஈரோடு மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி, கொள்கை விளக்க அணிச் செயலா் க.அழகுசுந்தரம், மாவட்டச் செயலா் என்.செல்வராகவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை தொடா்பான 3 சட்டத் திருத்தங்களுக்கு எதிராக, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றியுள்ள தீா்மானத்தைப் போன்று தமிழக சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பழனியிலிருந்து தாராபுரம் வழியாக ஈரோட்டிற்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு 2008 இல் பூமி பூஜை நடத்தியதோடு முடங்கியுள்ளது. அதனை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முன் வர வேண்டும்.

திண்டுக்கல் நத்தம் இடையே ரூ.247 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்பதோடு, தரமான சாலையாகவும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT