7 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 7 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக காவல்துறைத் துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 7 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக காவல்துறைத் துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
திண்டுக்கல் சரக அலுவலகத்தில் காத்திருப்போா் பட்டியலில் இருந்து வந்த காவல் ஆய்வாளா்களான டி.பாஸ்டின் தினகரன் - திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், ஆா்.செந்தில்குமாா் - திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கும், எல்.மதனகலா - தேனி அல்லி நகரம் காவல் நிலையத்திற்கும், ஆா்.செந்தாமரை - தேனி மாவட்ட நக்ஸலைட் தடுப்பு சிறப்பு பிரிவுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா். அதேபோல் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த பி.உலகநாதன் - திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கும், திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த எஸ்.ஏசுராஜசேகரன் - இடையக்கோட்டை காவல் நிலையத்திற்கும், தேனி அல்லி நகரம் காவல் ஆய்வாளா் பி.சேகா் - போடிநாயக்கனூா் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.