முகப்பு
செய்திகள்

துரந்தர் 2! இவரால் மட்டுமே ரூ. 500 கோடி கிடைக்கும்: ரன்வீர்

துரந்தர் படத்தில் நடித்ததற்காக துணை நடிகரான ராகேஷ் பேடியால் ரூ. 500 கிடைக்கும் என நடிகர் ரன்வீர் சிங் பேச்சு

Updated On : 19 மார்ச், 2026 at 8:05 AM
ராகேஷ் பேடி | ரன்வீர் சிங்
பகிர்:

துரந்தர் படத்தில் நடித்ததற்காக துணை நடிகரான ராகேஷ் பேடிக்கு ரூ. 500 கொடுக்கலாம் என நடிகர் ரன்வீர் சிங் பேசியுள்ளார்.

துரந்தர் திரைப்படத்தில் ஜமாலி கதாபாத்திரத்தில் நடித்த ராகேஷ் பேடி, ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசுகையில், “துரந்தர் 2 பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1,000 கோடி வசூலித்தால், அதில் ரூ. 500 கோடி ராகேஷு பேடியால்தான் கிடைக்கும் என்று படப்பிடிப்புத் தளத்தில் ரன்வீர் சிங் கூறினார்.

ஆனால், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது. ஒரு துணை நடிகருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?” என்று தெரிவித்தார்.

துரந்தர் படத்தில் ஒரு தந்திரமான அரசியல்வாதியின் பாத்திரத்தில்தான் ராகேஷ் பேடி நடித்துள்ளார். துரந்தர் முதல் பாகம், உலகளவில் ரூ. 1,303 கோடி வசூலித்த நிலையில், இன்று இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இருப்பினும், துரந்தர் 2-வின் சிறப்புக் காட்சிகள் புதன்கிழமையிலேயே வெளியிடப்பட்ட நிலையில், சிறப்புக் காட்சிகளிலேயே சுமார் ரூ. 52 கோடி வசூலித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Ranveer Singh credits Rakesh Bedi for Rs 500 crore of Dhurandhar 2's Rs 1000 crore

முழு கட்டுரையைப் படிக்க →