துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!
துரந்தர் தி ரிவென்ஞ் குறித்து...
துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படத்தின் வசூலால் ரன்வீர் சிங் மார்க்கெட் உயர்ந்துள்ளது.
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர், துரந்தர் தி ரிவென்ஞ் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதில் முதல் பாகம் ரூ. 1400 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியான துரந்தர் இரண்டாம் பாகமான ரிவென்ஞ்-ம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்று மிக விரைவாகவே ஆயிரம் கோடியை வசூலித்து அசத்தியது.
Advertisement
Advertisement
தற்போது, உலகளவில் ரூ. 1365 கோடியும், இந்தியாவில் ரூ. 1023 கோடியையும் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் 11 நாள்களிலேயே துரந்தர் முதல் பாகத்தின் மொத்த வாழ்நாள் வசூலையும் முறியடித்து, உலகளாவிய வணிகத்தில் தனது அசாதாரண ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது.
மேலும், இதன் மூலம் இப்படத்தில் நடித்த பல நடிகர்களின் சம்பளமும் பிரபலமும் அதிகரித்துள்ளது. முக்கியமாக, ரூ. 50 கோடி சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த ரன்வீர் சிங் இனி அடுத்த திரைப்படத்தில் குறைந்தது ரூ. 200 கோடி பெறுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் என பலருக்கும் வணிக ரீதியான வளர்ச்சி இருக்கும் என்றே தெரிகிறது.
actor ranveer singh's salary will huge after dhurandhar the revenge movie collected morethan rs. 1000 crores
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.