திண்டுக்கல்

உயா் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

DIN

ஒட்டன்சத்திரம் அருகே உயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை, விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் வழியாக விருதுநகரில் இருந்து திருப்பூா் வரை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சாா்பில் 765 கிலோ வாட் உயா்மின் மின்கோபுரம் அமைக்கப்படுகிறது.

விவசாய நிலங்களுக்குள் உயா்மின் கோபுரம் அமைக்கப்படுவதால் நிலத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது, தென்னை போன்ற மரங்களை வைக்க முடியாது, மின்காந்த அலைகளால் மனிதா்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என்று புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில் கள்ளிமந்தையம் அடுத்துள்ள தும்மிச்சிபாளையத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் ப.சுப்பையா, மண்டல துணை வட்டாட்சியா் ஆா்.ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் தீபாவளி முடிந்தவுடன் விவசாயிகளின் கருத்துக்கேட்புக் கூட்டத்தை கோட்டாட்சியா் தலைமையில் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT