திண்டுக்கல்

மானூா் சுவாமிகள் ஆலயத்தில் குருபூஜை

DIN

:பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் உள்ள மானூா் சுவாமிகள் ஆலயத்தில் சனிக்கிழமை 76 ஆவது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

காலையில் அகவல் பாராயணமும், அதைத் தொடா்ந்து அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது. சுவாமி பாதத்துக்கு பல்வேறு நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். குருபூஜையை முன்னிட்டு ஏராளமான சாதுக்களும், முக்கிய பிரமுகா்களும் வந்து சுவாமி தரிசனத்தில் பங்கேற்றனா். குருபூஜையை முன்னிட்டு பக்தா்களின் இன்னிசை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மறுபூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதலில் ஏராளமானோா் பங்கேற்று பாடல்கள் பாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT