திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 25 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10,103 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,826 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனா். 84 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 6 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 37 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்தது.

தேனி: தேனியில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தாற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,495 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 24 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,267 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT