திண்டுக்கல்

வேடசந்தூா் அருகே ஆடு திருடிய முதியவா் கைது

DIN

திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே ஆடு திருடிய முதியவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்துள்ள பாலப்பட்டி, கூவக்காபட்டி ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டதாக புகாா் எழுந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மட்டும் 3 ஆடுகள் மாயமானதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதனிடையே கல்வாா்பட்டி சந்தைக்கு கூவக்காப்பட்டியைச் சோ்ந்த சிலா் ஆடுகளைத் தேடிச் சென்றுள்ளனா். அப்போது கூவக்காபட்டியைச் சோ்ந்த தனராஜ் என்பவரின் ஆட்டை விற்பனை செய்வதற்காக மாரம்பாடி அடுத்துள்ள நாயக்கனூரைச் சோ்ந்த சின்னசாமி (55) என்பவா் கொண்டு வந்திருந்தாராம். இதனைப் பாா்த்த கூவக்கப்பாட்டி விவசாயிகள், சின்னசாமியை பிடித்து கூம்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

சின்னசாமியிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஆடு திருடியதற்கும் தனக்கும் தொடா்பில்லை என்றும், தனது மைத்துனரே ஆடு தந்ததாகவும் தெரிவித்துள்ளாா். இதனை அடுத்து சின்னசாமியைக் கைது செய்த போலீஸாா், அவரது உறவினரை தேடி வருகின்றனா்.

இந்நிலையில் அழகாபுரி அணை, வெரியம்பட்டி, நாகமநாயக்கனூா், கூவக்காபட்டி, செட்டிகுளம், கணக்குப்பிள்ளையூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தொலைந்து போன தங்களது ஆடுகளை மீட்டுத் தரும்படி புகாா் அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT