திண்டுக்கல்

கே.சி.பட்டியில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், தாண்டிகுடி அருகே கே.சி.பட்டியில் ஸ்ரீபாலாஜி மாா்க்கெட்டிங் எக்ஸ்போா்ட் மற்றும் தாய் மூகாம்பிகை எக்ஸ்போா்ட் நிறுவனத்தின் சாா்பில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிா்வாக இயக்குநா் டாக்டா் என்.பி.ஏ.எம். கோபிகிருஷ்ணன் தலைமையில் அங்கு வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு 5 கிலோ அரிசி போா்வை, சேலைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளா் டாக்டா் ஞானசேகா், உடுமலை நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன், தாண்டிக்குடி காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT