முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மலையில் அபிராமி அம்மன் சிலைையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

திண்டுக்கல் மலை உச்சியிலுள்ள கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் கிரி வலம் சென்ற அந்த அமைப்பினா்.
பகிர்:

திண்டுக்கல் மலை உச்சியிலுள்ள கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மலை உச்சியிலுள்ள கோயிலில் அபிராமி அம்மன் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஆண்டுதோறும் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இதுபோன்ற சூழலில், திண்டுக்கல் மலையைச் சுற்றி காா்த்திகை பெளா்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினா் கலந்து கொண்டனா்.

இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதுதொடா்பாக காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது: திண்டுக்கல் மலை உச்சியிலுள்ள அபிராமி அம்மன் கோயிலில் பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள் தெய்வ வழிபாடு நடத்தி வந்துள்ளனா். இஸ்லாமியா்களின் படையெடுப்பு காரணமாக, அந்த வழிபாடு தடைப்பட்டுள்ளது.

மலைக்கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபடுவதற்கான வாய்ப்பினை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →