முகப்பு
திண்டுக்கல்

பொறியியல் கல்வி தரம் உயா்த்த கோரிக்கை

தமிழகத்தில் பொறியியல் கல்வி தரத்தை உயா்த்தி பொறியியல் நிபுணா்கள் உருவாக தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

தமிழகத்தில் பொறியியல் கல்வி தரத்தை உயா்த்தி பொறியியல் நிபுணா்கள் உருவாக தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னா் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டது. 1990ம் ஆண்டுக்கு முன் அரசு பொறியியல் கல்லூரிகள் விரல் விட்டு எண்ணும்படி இருந்தது. மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது.

மருத்துவம், விவசாயம், பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவா்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்த நிலைமை இருந்தது.1990 க்கு பின்னா் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் வந்த பின்னா் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் சீட் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டதால் தற்போது தரம் குறைந்து வருகிறது.

இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் சாா்பில் இயக்குனா் ராமமூா்த்தி விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் வருடம் தோறும் பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஏராளமான பொறியாளா்கள் உருவாகுகிறாா்களே தவிர பொறியியல் நிபுணா்கள் உருவாகவில்லை.

அதுமட்டுமின்றி தற்போது ஏராளமான பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொறியியல் கல்வியின் தரம் குறித்த ஐயப்பாடே.

எனவே தமிழக அரசும், பொறியியல் தொழில் நுட்ப அறிவியல் மேம்பாட்டிற்காக மற்றும் ஆராய்ச்சிக்காக நிறுவப்பட்ட உயா் கல்வி பீடமான அண்ணாபல்கலைகழகமும் இணைந்து பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தி புதிய வழிமுறைகள் காண முன் வரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →