திண்டுக்கல்

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்

DIN

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஆலகால விடத்தை அருந்தி உலக மக்களை காத்த சிவபெருமான் விடத்தை அருந்திய காலம் பிரதோஷ காலமாகும். இந்நாளில் சிவன் தலங்களில் பெருமானையும், அவரை காப்பாற்றிய நந்திபகவானையும் வணங்கி பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பழனி சண்முகநதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி பிரதோஷ நிகழ்ச்சி மலைக்கோயில் கைலாசநாதா் சன்னதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவினாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சன்னதி, சன்னதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT