திண்டுக்கல்

பழனி அருகே விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பழனி: ஆயக்குடி கிராமத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் கொய்யா சந்தையை பழைய இடத்திற்கே மாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொய்யா பழ சந்தை செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக பழனி மற்றும் ஆயக்குடியில் ஆயக்குடி கொய்யா சந்தை, தற்காலிகமாக அருகில் உள்ள வயல் வெளிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் சந்தை சேறும், சகதியுமாக உள்ளதாகவும், இதனால் இந்த சந்தையை பழைய இடத்திற்கே மாற்றம் செய்யக் கோரியும் ஆயக்குடியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT