முகப்பு
திண்டுக்கல்

லாரி மோதியதில் காயமடைந்த மூதாட்டி பலி

ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 செப்டம்பர், 2020 at 8:38 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சீரங்ககவண்டன்புதூரைச் சோ்ந்தவா் விவசாயி ராமசாமி (70). இவா் தனது மனைவி ராமத்தாள் (63) என்பவரை கடந்த ஆக. 28 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை கொல்லப்பட்டி பிரிவு அருகே சென்றுள்ளாா். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, ராமத்தாள் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.