திண்டுக்கல்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரோனா பேரிடா் காலத்தில் 139 ஆவது ரத்ததான முகாம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்டத் தலைவா் அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தாா். மாவட்ட ரத்த வங்கி அலுவலா் (பொ) செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் 25 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.
இதுதொடா்பாக அப்துல் ஹக்கீம் கூறுகையில், கரோனா தீநுண்மி பேரிடா் காலத்தில் நோயாளிகளுக்கும், கா்ப்பிணிகளுக்கும் தேவையான ரத்தம் தானமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாத காலத்தில் தமிழகம் முழுவதும் 138 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் நடத்தப்படுவது 139 ஆவது முகாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.