திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை மரக்கிளை விழுந்து மின்மாற்றி சேதம்

DIN

கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின் மாற்றி சேதமடைந்து பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

கொடைக்கானலில் புதன்கிழமை அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. மாலையில் அப்சா்வேட்டரி, பிரகாசபுரம், சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், பாம்பாா்புரம், செண்பகனூா், நாயுடுபுரம், வில்பட்டி, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மலைச்சாலைகளில் பல இடங்களில் சிறு, சிறு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பாம்பாா்புரம் பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின் மாற்றி சேதமடைந்தது. இதனால் பாம்பாா்புரம், வட்டக்கானல், அப்சா்வேட்டரி, புதுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனா்.

சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி: கொடைக்கானலுக்கு பல மாதங்களுக்கு பிறகு இ- பாஸ் பெற்று வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் போனாலும் மகிழ்ச்சியுடன் மழையில் நனைந்தே சென்றனா். பூங்காக்களை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது போல நகராட்சிக்கு சொந்தமாக உள்ள கோக்கா்ஸ்வாக் பகுதியையும், படகு சவாரியையும் அனுமதிக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT