திண்டுக்கல்

பழனியில் சிறப்பு கரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் மூடல்

DIN

பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் செயல்பட்டு வந்த சிறப்பு கரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் பரிசோதனை செய்யும் இடங்கள் மூடப்படுவதாக சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் கரோனா வைரசால் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 8, 000 போ் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் முக்கிய பகுதியான பழனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. பழனி அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும் அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பழனியாண்டவா் ஆண்கள் கலைக்கல்லூரியில் 200 நோயாளிகள் தங்கும் வகையில் சிறப்பு சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டன.

மேலும் கரோனா பரிசோதனை மையங்களும் செயல்பட்டு வந்தது. இதனால் கரோனா அறிகுறி உள்ளவா்களுக்கு எளிதாக பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கல்லூரி மாணவா்களுக்கு பருவ தோ்வுகள் துவங்கவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த சிறப்பு மையம் மூடப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் வைரசால் பாதிக்கப்பட்டோா் பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட வெளியூா் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தொற்று வேகமாக பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக பழனியாண்டவா் கலைக்கல்லூரியில் இயங்கிவந்த கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தகுந்த இடத்துக்கு மாற்றி மீண்டும் செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். அரசுமருத்துவமனையில் உள்ள கரோனா மையம் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT