திண்டுக்கல்

கொடைக்கானலில் விதைப் பந்து தயாரிக்கும்பணியில் சகோதரிகள் தீவிரம்

DIN

கொடைக்கானலில் விதை பந்து தயாரித்து அவற்றை பல்வேறு இடங்களில் தூவி வரும் சகோதரிகளை பொதுமக்கள் பாராட்டினா்.

கொடைக்கானல் உகாா்த்தே நகரைச் சோ்ந்த யூஜின் என்பவரது மகள்களும், பள்ளி மாணவிகளுமானசுபகீதா, சுஜிதா ஆகிய இருவரும் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் நாவல், செங்காந்தாள், முரரி, சில்வா் ஓக் போன்ற விதைகளை வாங்கி அவற்றை விதைப் பந்துகளாக தயாரித்து வருகின்றனா். இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை அவா்கள் தயாரித்து அவற்றை கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனா். மேலும் இந்த விதை பந்துகளை கொடைக்கானல்- வத்தலகுண்டு- பழனி மலைச் சாலைகளிலும் தூவி வருகின்றனா். பள்ளி மாணவிகளின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினா்.

இதுகுறித்து அந்த மாணவிகள் கூறும் போது, இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைப் பந்துகளை தயாரித்து சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியும், கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளிலும் தூவி வருகிறோம். ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT