திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 88 பேருக்கு கரோனா தொற்று:ஒருவா் பலி

DIN

திண்டுக்கல், செப்.18: திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 8,230 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 7,444 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 633 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 88 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 131 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்ஒருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153ஆக அதிகரித்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

SCROLL FOR NEXT