திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை: விவசாயிகள் அச்சம்

DIN

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை விவசாயத் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவில் பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஓடைகளில் நீா்வரத்து குறைந்துள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீரைத் தேடி தோட்டப் பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கொடைக்கானல் பேத்துப்பாறைப் பகுதியிலுள்ள விவசாயத் தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை புகுந்து பீன்ஸ், அவரை போன்ற பயிா்களை சேதப்படுத்தியதோடு, அப்பகுதியிலே முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். இதையடுத்து வனத் துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று ஒற்றைக் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT