விராலிமலை: தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார்
விராலிமலை வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
விராலிமலை வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர். விராலிமலை வழியாக மணப்பாறைக்கு தினசரி தனியார் பேருந்து ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில் இன்று காலை புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு பயணித்த பயணிகளிடம் இந்த பேருந்தில் ரூபாய் 30 வசூலிக்கப்பட்டதாம்.
இது மற்ற பேருந்துகளை விட ரூபாய் 4 அதிகமாம். மேலும் இந்த பேருந்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டை பயணிகளுக்கு வழங்கி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று இந்த பேருந்தில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை பயணித்த பயணிகள் இது குறித்து நடத்துனரிடம் கேட்டுள்ளனர்.
Advertisement
இதற்கு முறையாக நடத்துநர் பதில் அளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விராலிமலை சோதனைச் சாவடியில் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விராலிமலை காவல்துறையினர் நிகழ்விடம் வந்தனர்.
இதனை தொடர்ந்து பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.