ஃபால் - 2 போஸ்டர்!
ஃபால் - 2 திரைப்பட போஸ்டர்...
ஹாலிவுட்டில் உருவாகும் ஃபால் - 2 திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் படமாக உருவான ஃபால் (Fall) கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் பரவலான கவனத்தைப் பெற்றது. சுற்றுலா செல்லும் இரண்டு தோழிகள் யாருமற்ற பகுதியிலுள்ள ஓர் உயரமான இரும்பு கோபுரத்தில் ஏறி, இறங்க முடியாமல் தவிக்கும் கதையாக உருவாகியிருந்தது.
படம் முழுக்க பதற்றத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இருந்தால் இப்படம் விமர்சகர்களின் சிபாரிசு பட்டியலிலும் இணைந்தது.
Advertisement
Advertisement
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகமான ஃபால் - 2 உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஸ்காட் மன் எழுதி, தயாரிக்க பீட்டர் மற்றும் மைக்கல் ஸ்பெரிக் ஆகியோர் இயக்குகின்றனர்.
இந்த நிலையில், இதன் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மலையேற்றம் செல்பவர்கள் சந்திக்கும் உயர் போராட்டமாக இது உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. இப்படம் ஆக.7 ஆம் தேதி வெளியாகும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
The poster of the Hollywood film Fall 2 has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.