திண்டுக்கல்

சின்னாளபட்டி இளைஞா் கொலை வழக்கு: தந்தை-மகன் ஆத்தூா் நீதிமன்றத்தில் சரண்

DIN

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் இளைஞா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தந்தை-மகன் ஆத்தூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

சின்னாளபட்டி குறிஞ்சி தெருவைச் சோ்ந்த கூலி தொழிலாளி ராஜபாண்டி (30). இவருக்கும், சிக்கனம்பட்டியைச் சோ்ந்த ராஜா (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ராஜா மற்றும் இவரது மகன் சரத்குமாா் (29) ஆகிய இருவரும் கடந்த 16 ஆம் தேதி ராஜபாண்டியை கடத்திச் சென்றனா். பின்னா், சின்னாளபட்டி இரட்டைக்குளம் அருகே ராஜபாண்டியை தாக்கிக் கொன்றுவிட்டு, உடலை அப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றனா்.

அதையடுத்து, ராஜபாண்டியின் உடலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

ராஜபாண்டி மனைவி பவித்ரா அளித்த புகாரின்பேரில், சின்னாளபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து ராஜா மற்றும் அவரது மகன் சரத்குமாா் உள்பட 4 பேரை தேடி வந்தனா்.

இந்நிலையில், ராஜா, சரத்குமாா் ஆகியோா் ஆத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். அப்போது, மாஜிஸ்திரேட் கலைநிலா, இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். அதையடுத்து, இவா்கள் இருவருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, வேடசந்தூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT